கட்சியினரின் ஆர்வ கோளாறால் இருண்டு போன இசிஆர் | ECR puducherry | Street light problem | EB warns
கட்சியினரின் அலட்சியம் உயிருக்கு உலை வைக்கும்! எச்சரிக்கும் மின்துறை அதிகாரிகள் டிஸ்க்: புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் முருகா தியேட்டர் வரையுள்ள 4 கி.மீ கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலையாக உள்ளது. பகல் இரவு என எல்லா நேரமும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த இ.சி.ஆரில் ஒரு மாதமாக மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடந்தன. இந்த அவலம் தொடர்பாக தினமலரில் செய்தி வெளியான நிலையில், மின்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இசிஆரில் தெரு லைட்டுகளுக்கான மின் கேபிள்கள் பூமிக்கு அடியில் செல்லும் நிலையில், கட்சியினர் கொடி கம்பம் நட பள்ளம் தோண்டுவதாலேயே இதுபோன்ற பிரச்சனை வருவதாக அதிகாரிகள் புலம்பினர்..