உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவினர் ஊழல் குறித்து 6 மணி நேரம் மீட்டிங்! | ED Case | Chennai ED Raid| Rahul Naveen

திமுகவினர் ஊழல் குறித்து 6 மணி நேரம் மீட்டிங்! | ED Case | Chennai ED Raid| Rahul Naveen

சென்னையில் 3 நாள் முகாமிட்டுள்ள அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன், பெண்டிங்கில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். திமுகவை சேர்ந்த பொன்முடி, வைத்திலிங்கம், நேரு ஆகியோர் துறைகளில் நடந்த ஊழல் விபரங்கள் குறித்து நேற்று ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. அப்போது தமிழக போலீஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பதிவு செய்யும் எப்ஐஆர்களை மாநில போலீசார் தருவது இல்லை. அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என ராகுல் நவீனிடம் சென்னை மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை ஏற்க மறுத்த நவீன், விசாரணை இறுதி கட்டத்தில் உள்ள வழக்குகள் மீது ஒரு மாதத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளார். மேலும் சட்டசபை தேர்தல் ன் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அதிபர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பிப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ