உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Ex RTO வீடு, கண்டெயினர் நிறுவனத்தில் ED வேட்டை: நடந்தது என்ன? | ED Raid Chennai | Enforcement Direct

Ex RTO வீடு, கண்டெயினர் நிறுவனத்தில் ED வேட்டை: நடந்தது என்ன? | ED Raid Chennai | Enforcement Direct

சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக திருவெற்றியூரில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்யும் முருகேசன் என்பவர் வீட்டில் காலை 7 மணிக்கே சோதனை தொடங்கியது. அதே போன்று, தேனாம்பேட்டையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் தரணிதரன் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் தனது அரசு பதவி காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் சேர்த்துள்ளார். அதனை தொழிலதிபர் முருகேசன் மற்றும் பிற முகவர்கள் மூலம் முதலீடு செய்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதுதவிர, சென்னையில் மேலும் ஒரு சில இடங்களில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிஆர்பிஎப் போலீஸ் குவிக்கப்பட்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதால் அங்கே பரபரப்பு நிலவியது. இதே போல தொழிலதிபர் முருகேசன் மகன்கள் ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கு சொந்தமான இடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவர்கள் நடத்தி வரும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் கண்டெயினர் ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, முந்தைய திமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளுடன் இந்த சோதனைகள் தொடர்புடையவை என தெரியவந்துள்ளது. விசாரணையில் உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. #EDRaid #ChennaiNews #EnforcementDirectorate #TamilNaduNews #EDSearch #MoneyLaundering #RTOInvestigation #Thenampet #Tiruvottiyur #ChennaiUpdates #BreakingNewsTN #CorruptionInvestigation #PMLA #CentralForces #TNNews

ஜூலை 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ