அதிகளவில் பணப்பரிவர்த்தனை; தேடி வந்தது அமலாக்கத்துறை ED Raid| SDPI|
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அண்ணாஜி ராவ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீக். இரும்புகடை நடத்தி வருகிறார். எஸ்டிபிஐSDPI கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காக வீட்டை சுற்றிலும் சிஆர்பிஎப் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதே போல், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பழக்கடை நடத்தி வரும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ரீலா என்பவரின் கடையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர். சட்டவிரோதமாக அதிகளவில் பணப்பரிவர்த்தனை நடந்து இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.
மார் 20, 2025