டாஸ்மாக், தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி ED raids |TASMAC |High court
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மார்ச் 6 முதல் 8 வரை அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி, தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் இருவரும் விசாரிப்பதில் இருந்து விலகினர். அதன்பிறகு நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வு விசாரித்து வந்தது. அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு சோதனை நடத்தியதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஏப் 23, 2025