தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது: இபிஎஸ் கேள்வி Edappadi Palanisami | ADMK | Law and Orde
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப தகராறை விசாரிக்க சென்ற எஸ்எஸ்ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோவை போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தூக்கிட்டு இறந்துள்ளார் என செய்திகள் வருகின்றன. காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதற்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? விசாரிக்க செல்லும் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு அலட்சியமாக இருக்கின்றார்கள் என்பதையும் எப்படி எடுத்துக்கொள்வது? மோசமாகிவிட்ட சட்டம் ஒழுங்கை பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசை திருப்பும் அரசியலை மட்டுமே ஸ்டாலின் செய்கிறார். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம். மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புதுதான்.