உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு! Edappady Palanisamy | ADMK | Annamalai | BJP

அண்ணாமலை உருவ பொம்மை எரிக்க முயன்றதால் தள்ளுமுள்ளு! Edappady Palanisamy | ADMK | Annamalai | BJP

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக பா.ஜ. மாநிலத்தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகரச் செயலாளர் என்.எம்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் செல்வமணி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எஸ்.எஸ்.ஐ. ராஜபாண்டி சட்டை கிழிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பிறகு கலைந்து சென்றனர்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை