பைக்கில் சென்ற தந்தை, மகனுக்கு நொடியில் நடந்த சம்பவம்! Edappady Palanisamy | ADMK | Banner
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 13, 14ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்திலும் மிகப்பெரிய பேனர் ஒட்டி வைத்திருந்தனர். வேகமாக காற்று வீசிய போது அந்த பேனர் கிழிந்து அவ்வழியே சென்ற தந்தை, மகன் மீது விழுந்தது. மகனை பள்ளியில் விட சென்ற போது நடந்த இந்த விபத்தில் இருவரும் காயம் அடைந்தனர் . அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சசி கொடுத்த புகாரின்பேரில் ஆம்பூர் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் மிது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.