உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / EDக்கு மத்திய அரசு அனுமதி: கெஜ்ரிவால், மணீஷுக்கு சிக்கல் | Arvind kejriwal | Manish sisodia | ED

EDக்கு மத்திய அரசு அனுமதி: கெஜ்ரிவால், மணீஷுக்கு சிக்கல் | Arvind kejriwal | Manish sisodia | ED

டில்லியில் புதிய மதுபான கொள்கையை உருவாக்கி, தனியாருக்கு மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் ரு,2800 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜ அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு கவர்னர் சக்சேனா அனுமதி வழங்கினார். ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்க துவங்கியது. சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக, கறுப்புப் பண தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை 2023ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. கடந்த ஆண்டு முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது இருவருமே ஜாமினில் வெளிவந்து விட்டனர்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ