உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிராக ஐகோர்ட்டில் டாஸ்மாக் மனு | ED raid | Tasmac filed case | High court

அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிராக ஐகோர்ட்டில் டாஸ்மாக் மனு | ED raid | Tasmac filed case | High court

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் 2 வாரத்துக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவை வழங்க லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே டெண்டர் வழங்கியது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த முறைகேடுகள் மூலம் டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !