உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீன முதலீடுகளை இந்தியாவுக்கு திருப்பும் சுவிட்சர்லாந்து | EFTA | India | Switzerland

சீன முதலீடுகளை இந்தியாவுக்கு திருப்பும் சுவிட்சர்லாந்து | EFTA | India | Switzerland

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவுக்கும், EFTA எனும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்துக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மைக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரி தளர்வு உட்பட பல சலுகைகள் கிடைக்கும். இதனால் நீண்டகாலமாக சீனாவில் முதலீடு செய்து வரும் சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன. இதுவரை சீனா தான் சுவிட்சர்லாந்திலிருந்து அதிக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து வந்தது. கடந்த 2022ல் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளியது என சுவிஸ் நேஷனல் பேங்க் தெரிவித்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. EFTA அமைப்பில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் சுவிட்சர்லாந்து தான் பொருளாதார அடிப்படையில் பெரிய நாடாகும்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ