உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜம்மு - காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை Mehbooba Mufti on Palestine | Eid Festival at Ind

ஜம்மு - காஷ்மீரில் அமைதியாக நடந்த பக்ரீத் தொழுகை Mehbooba Mufti on Palestine | Eid Festival at Ind

நாடு முழுதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு - காஷ்மீரில் அமைதியான முறையில் தொழுகை நடந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் ஈகை திருநாளாம் பக்ரீத்தை கொண்டாடினர். அனந்த்நாக்கில் ஒன்று கூடிய முஸ்லிம்கள் கூட்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் சீக்கியர்கள் சார்பில் அவர்களுக்கு பழ ரசம், இனிப்புகள் வழங்கப்பட்டன. பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ தரப்பில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், முஸ்லிம் மதத் தலைவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில், இந்தியா - வங்கதேச எல்லையில், இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படையினர், ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி பக்ரீத் வாழ்த்து பகிர்ந்தனர். மும்பையில் அரபிக்கடல் நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்காவில் ஏராளமான முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈகை திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஜூன் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி