மின் மயானத்தில் இல. கணேசன் உடல் தகனம்
நாகாலாந்து கவர்னராக இருந்த இல. கணேசன், தலையில் அடிப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார். சென்னை தியாகராய நகரில், அவரது உடலுக்கு தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பாஜ மற்றும் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இல கணேசனின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண் செல்லப்பட்டது. தேசிய கொடி பேர்த்தப்பட்ட சந்தன பேழையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு, நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முப்படையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அதன் பின்,42 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. breath குடும்பத்தார் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்த பின், இல.கணேசன் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.