சரிபார்ப்பு பணி 12 மணி நேரமாக நீடிப்பதால் பரபரப்பு! TN Election | Election Flying Squad | ECI | Jewe
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூபதி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சேலத்தில் இருந்து அவ்வழியாக மதுரைக்கு சென்ற கொரியர் நிறுவன வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 3 சாக்கு பையில் 141 பெட்டிகளில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் இருந்தன. அதன் மதிப்பு 47.61 கோடி ரூபாய். வாகனத்தில் இருந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் வழங்கிய ஆவணத்துக்கும், வாகனத்தில் இருந்த நகை மதிப்புக்கும் வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகனத்துடன் நகைகள் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. #TNElection #ElectionFlyingSquad #ECI #JewellerySeized #Election2026 #VotingIntegrity #PollWatchers #ElectionSecurity #VoterAwareness #SeizedJewellery #ElectionMonitoring #TransparencyInElections #IndianElections #PoliticalAwareness #ElectionPractice #GLiveUpdate #VigilanceInVoting #ElectionNews