விதிமீறிய திமுகவினர் - அடி வாங்கியவரிடம் சமரச பேச்சு | DMK Meeting | Election Flying Squad | Krishn
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளிக்கு எதிரே உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் பிஎல்ஓ ஆலோசனை கூட்டம் நடந்தது அனுமதி இன்றி எம்எல்ஏ முன்னிலையில் நடந்த கூட்டத்தை படம் பிடிக்க தேர்தல் பறக்கும் படை குழுவினர் சென்றனர். அங்கிருந்த திமுகவினர் இதை தடுத்து பறக்கும் படை கேமராமேன் வேடியப்பனை தாக்கினர். வேடியப்பன் தானாக முன்வந்து திமுகவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பறக்கும் படை அதிகாரிகள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதியப்படவில்லை. பெரிதுபடுத்த வேண்டாம். வேடியப்பனுக்கு தனியாக ஒரு கான்ஸ்டபிளை பாதுகாப்புக்கு நியமிப்பதாக அவரிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகிறது. #DMKMeeting #ElectionRulesViolation #FlyingSquad #CameramanAssault #PoliticalNews #TamilNaduPolitics #ElectionIntegrity #MediaFreedom #CivicEngagement #TNElection2026 #dmkviolation #breakingnews