கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது ஐதராபாத்தில் நடந்த விபரீத சம்பவம்! Electric shock dead
ஐதராபாத் ராமந்தாபூரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணரை வைத்து நள்ளிரவில் ஊர்வலம் கொண்டு சென்றனர். அப்போது அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் தேரை இளைஞர்கள் தனியாக தள்ளி செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த தேர் எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. தேரை தள்ளி சென்ற இளைஞர்கள் அனைவரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். மயங்கிய 9 பேரை மீட்டு அப்பகுதி மக்கள் ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அதில் கிருஷ்ணா யாதவ், சுரேஷ் யாதவ், ஸ்ரீகாந்த் ரெட்டி, ருத்ரவிகாஸ், ராஜேந்திர ரெட்டி ஆகியோர் இறந்தனர். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உப்பல் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.