மின்சார கட்டணத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி
தமிழகத்தில் மின்சார கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஜூலை 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய மின் இணைப்பு, மீட்டர் வைப்பு தொகை, பதிவு, மேம்பாட்டு கட்டணம் உள்ளிட்ட மின்சார சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன. இது, ஜூலை 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒருமுனை மின் இணைப்புக்கான கட்டணம் 1020ல் இருந்து 1070 ஆக உயர்ந்துள்ளது. மும்முனை இணைப்புக்கு 1535ல் இருந்து 1610 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீட்டருக்கான டெபாசிட் ஒரு முனை இணைப்புக்கு 765ல் இருந்து 800 ஆனது. மும்முனை இணைப்புக்கு 2045ல் இருந்து 2145 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. மீட்டரை இடமாற்றம் செய்தற்கான கட்டணம் 1020ல் இருந்து 1070 ஆக உயர்ந்தது. மும்முனை இணைப்புக்கு 1535ல் இருந்து 1610 ஆக அதிகரித்துள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, மேம்பாட்டு கட்டணம், பாதுகாப்பு வைப்புத்தொகை,கேபிள் வழி இணைப்பு என அனைத்து மின் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன.