வீட்டுக்குள் புகுந்து துலாவிய யானைகள்
கோவை மருதமலை அருகே ஐஓபி காலனியில் நள்ளிரவில் குட்டியுடன் உலா வந்த யானை, ஒரு வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தது. தாயின் பின்னாலயே சென்ற குட்டி, வீட்டு வாசலில் வளர்க்கப்பட்டு இருந்த செடிகளை பறித்து தின்றது. கேட் உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே பார்த்தபோது, யானை நின்று கொண்டிருந்ததை பார்த்து பயந்தனர். அவர்கள் பதட்டத்தில் இருக்கும்போதே வீட்டின் கதவை யானை தட்டியது. வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து மாடிக்கு ஓடினார். சிறிது நேரத்தில் யானை ஒரு முட்டு முட்டியதில் கதவு உடைந்து விழுந்தது. தும்பிக்கையை மட்டும் உள்ளே விட்டு அங்கும் இங்கும் துலாவியது. ஏதும் கிடைக்கவில்லை. சுற்றிமுற்றி பார்த்த யானைகள் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வனத்தை நோக்கி நகர்ந்ததால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.