இந்தியாவில் ஸ்டார்லிங்க் திட்டத்துக்கு முட்டுக்கட்டையா? Elon Musk | Starlink | Satellite Internet |
குக்கிராமங்களுக்கும் செயற்கைக்கோள் மூலமாக இன்டர்நெட் சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் திட்டத்தை இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்கள் தடுக்கின்றனர். இந்திய மக்கள் மீது தங்கள் ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். அவர்கள் யார் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம் என உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. எலான் மஸ்கின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைக்காக விண்ணப்பித்த 3 நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சேவை தொடங்குவதற்கு முன் பயனர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டியது கட்டாயம். பாதுகாப்பு தணிக்கை நடைமுறைகள் 3 நிறுவனங்களுக்கும் சமமான அளவிலேயே பரிசீலனையில் உள்ளன. எந்த நிறுவனத்திற்கும் பாரபட்சமோ, தனிச்சலுகையோ காட்டப்படவில்லை. இந்த நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தியாவின் விதிமுறைகள், அவற்றின் செயல்பாட்டில் பாரபட்சம் இருப்பதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என எலான் மஸ்கிற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. #ElonMusk #StarlinkIndia #India #StarlinkVsGovt #SatelliteInternet #MinistryOfCommunications #TechNewsIndia #ElonMuskTweet #SatelliteSpectrum #Dinamalar