உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருமலையில் பாதுகாப்பு குறைபாடா? பக்தர்கள் கவலை |Elumalaiyan temple|Muslim person prayed|Tirupati

திருமலையில் பாதுகாப்பு குறைபாடா? பக்தர்கள் கவலை |Elumalaiyan temple|Muslim person prayed|Tirupati

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இந்து மத கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். வேற்று மத வழிபாட்டு முறைகள், வேற்று மத கடவுள்களின் படங்கள் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த கூடாது. இதனால் அலிபிரி சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வேற்று மத கடவுள்கள், நடிகர், நடிகைகள், அரசியல் கட்சியினரின் ஸ்டிக்கர் படங்கள், கொடி உள்ளிட்டவை இருந்தால் பறிமுதல் செய்யப்படுகிறது. வேற்று மதத்தினர் சாமி தரிசனம் செய்ய சென்றால் இந்து மதத்தின் மீதும், ஏழுமலையானின் மீது பக்தியும் நம்பிக்கையும் இருப்பதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இருந்தும் திருமலையில் மீண்டும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழுமலையான் கோயிலின் புரோகிதர் சங்கம் அருகே ஒருவர் 10 நிமிடங்களுக்கும் மேலாக தொழுகை செய்துள்ளார். இதை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் திருமலையில் இதேபோன்ற சம்பவம் நடப்பது பக்தர்களை கவலையடைய செய்துள்ளது.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி