இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் போலீஸ் தடியடி | Emanuel sekaran memorial | 2 Team clash | Police
அஞ்சலி செலுத்துவதில் தகராறு கலவர பூமியாக மாறிய இமானுவேல் சேகரன் நினைவிடம் டிஸ்க்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் காலை முதல் அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தின் மேல் ஏறினர். அப்படி நினைவிடத்தின் மீது ஏறக்கூடாது என மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தபோதே கிருஷ்ணசாமியை மேலே ஏற்றி அஞ்சலி செலுத்த வைத்தனர். அவர்களை கீழே இறங்குமாறு தேவேந்திர பண்பாட்டு கழகத்தினர் கோவமாக கூறியதால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றும் அடங்காமல் கண்மூடித்தனமாக சேர், மலர் வளையங்களை ஒருவர் மீது ஒருவர் வீசினர். வேறு வழியில்லாமல் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியதால் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பெரும் பதட்டம் நிலவியது.