கலக்கத்தில் இண்டி கூட்டணி கட்சியினர்! Emergency Declaratio |Shah Commission Report| Congress| BJP
நாட்டின் அரசியலமைப்பை பா.ஜ. மாற்ற முயற்சிக்கிறது என்கிற கோஷத்துடன், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது இண்டி கூட்டணி. பார்லிமென்டிலும் இது குறித்து ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர். இதை எதிர்கொள்ள, பா.ஜ.வுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சி குறித்து, பா.ஜ.வினர் எதிர்வாதம் வைத்தனர். உடனே ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், எமர்ஜென்சி காலத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து விசாரித்த, ஷா கமிஷனின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கலாமே என யோசனை கூறினார். 1975ல் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார் இந்திரா. தி.மு.க தலைவர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறை சென்றனர். பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. ஜனதா கட்சி, 1977ல் ஆட்சி அமைத்தவுடன், எமர்ஜென்சியின் போது நடந்த அராஜகங்களை ஆராய, முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.சி. ஷா தலைமையில் கமிஷனை அமைத்தது, மொரார்ஜி தலைமையிலான ஜனதா அரசு.