SpiceJet எமர்ஜென்சி லேண்டிங்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | SpiceJet | Emergency Landing
SpiceJet விமான டயர் கிழிந்தது சென்னை ஏர்போர்ட்டில் திக்...திக்... 91 பேருடன் விமானம் வட்டமடித்ததால் பரபரப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கு புறப்பட்டது. 85 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 91 பேர் இருந்தனர். விமானம் அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். ஆனால் சென்னை அருகே நடுவானில் பறந்தபோது, விமான சக்கர டயர் கிழிந்திருப்பது தெரிய வந்தது. இதை கண்ட விமானி அதிர்ச்சியடைந்தார். இப்படியே விமானத்தை சென்னையில் தரை இறக்கினால் ஓடுபாதையில் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் விமானத்தை எமர்ஜென்சி லேண்டிங் செய்வதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரித கதியில் செய்து முடிக்கப்பட்டன.