கள்ளக்குறிச்சி அருகே நிலவும் பதற்றமான சூழல் | Encroachment | Protest
கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே உள்ளது மேமாலூர் கிராமம். இங்கு ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இதனால் ஏரிக்கு நீர் செல்லும் வழி தடைபட்டு ஏரி வறண்டு காணப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதே ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. ஏற்கனவே மூன்று முறை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை முயன்ற போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நவ 09, 2024