உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசாரணை வளையத்தில் ரவிச்சந்திரன்: அடுத்தது என்ன? Enforcement department | Raid | Minister nehru | Ra

விசாரணை வளையத்தில் ரவிச்சந்திரன்: அடுத்தது என்ன? Enforcement department | Raid | Minister nehru | Ra

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருக்கும் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன். இவர் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (True value Homes) (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக நேருவின் மகன் அருண் மற்றும் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நேருவின் இல்லம், அவரது மகன், மகளின் வீடுகள், சகோதரர்கள் இல்லம் மற்றும் அவர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்‍கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வசிக்‍கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் வீட்டிலும், அங்குள்ள கட்டுமான நிறுவனத்திலும் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ