கிரிமினல் வழக்குக்கு உதவ ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் Bengaluru police inspector bribery case
ெங்களூரு அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் கோவிந்தராஜூ. இவர், முகமது அக்பர் என்பவரின் ஒரு கிரிமினல் வழக்குக்கு உதவி செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முகமது அக்பர் முன்பணமாக 1 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறினார். பின்னர் அவர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். போலீசார் தந்த ரசாயனம் தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு சிர்சி சர்க்கிள் என்ற பகுதிக்கு சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூவை வரவழைத்து பணத்தை கொடுக்கும்போது, லோக் ஆயுக்தா போலீசார் கண்காணித்து கையும் களவுமாக இன்ஸ்பெக்டரை பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #BengaluruPolice #PoliceBribery #Lokayukta #KarnatakaLokayukta #BriberyCase #CaughtRedHanded #AntiCorruption #Bengaluru #KarnatakaPolice #Corruption #Govindaraju #ChitFundCase #PoliceCorruption