உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்க நடவடிக்கை

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்க நடவடிக்கை

#Annauniversity #BEAdmission #Councelling #EngineeringAdmission #cbse #AICTE # தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளில், 2026 - 27ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடக்க உள்ளது. ஆகஸ்ட் 30 வரை முதல் கட்ட கலந்தாய்வு, அதன் பின் துணை கலந்தாய்வு நடக்கும். அதற்கான தேதி பின்னர் வெளியாகும். இந்த சூழலில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமான ஏஐசிடிஇ, ஆண்டு அட்டவணைப்படி, இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை, ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்ல செப்டம்பர் மாதம் வரை இன்ஜினியரிங் சேர்க்கையை நடத்திட அவகாசம் வழங்க வேண்டும் என ஏஐசிடிஇயிடம் அனுமதி கேட்டு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏற்பட்ட குளறுபடியால், மாணவர்கள் பலர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு மறுமதிப்பீட்டு முடிவுகள், மதிப்பெண் சான்றிதழ்கள் வர இன்னும் சில காலம் ஆகலாம். எனவே, சிபிஎஸ்இ மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை, நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என, ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ஷியாமா ரத் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஜூலை 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !