உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொறியியல் தரவரிசையில் காஞ்சிபுரம் மாணவி முதலிடம்! Engineering Counselling 2025 | Rank List | Kanchi

பொறியியல் தரவரிசையில் காஞ்சிபுரம் மாணவி முதலிடம்! Engineering Counselling 2025 | Rank List | Kanchi

தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். இதில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடமும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகா 2ம் இடமும் அமலன் ஆன்டோ 3ம் இடமும் பிடித்தனர். முதலிடம் பிடித்த சகஸ்ரா காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஜெயவேல், அருணா. முதலிடம் பிடித்ததை அறிந்த சகஸ்ரா தான் படித்த எம்எல்எம் பள்ளிக்கு சென்றார். ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார். சகஸ்ராவை ஆசிரியர்களும், சக மாணவர்களும் பாராட்டினர். இந்த ஆண்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11ம் தேதி வரை நடக்கிறது. பொது பிரிவினருக்கு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரையும், துணை கலந்தாய்வு இணையதள வாயிலாக ஆகஸ்ட் 21 முதல் 23 வரையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டி: சகஸ்ரா முதலிடம் பிடித்த மாணவி

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !