/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்லாமியர்களையும் திரட்டுவோம்: திமுகவுக்கு கிறிஸ்தவர்களின் எச்சரிக்கை | Tenkasi Municipality
இஸ்லாமியர்களையும் திரட்டுவோம்: திமுகவுக்கு கிறிஸ்தவர்களின் எச்சரிக்கை | Tenkasi Municipality
தென்காசி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை 125 ஆண்டுகளாக மாணவர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கே அங்கன்வாடி மையம் கட்டப்பட்ட நிலையில், இப்போது ரேஷன் கடை கட்டும் முயற்சிகள் நடக்கிறது. இதனால் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என சர்ச் நிர்வாகிகள் கூறினர்.
செப் 06, 2025