உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலையிட விரும்பாத பாஜ; தூக்கம் தொலைத்த செங்கோட்டையன்! | EPS | ADMK | Sengottaiyan | BJP

தலையிட விரும்பாத பாஜ; தூக்கம் தொலைத்த செங்கோட்டையன்! | EPS | ADMK | Sengottaiyan | BJP

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்து என்ன செய்வது என்றே புரியாத நிலையில் துாக்கமின்றி தவிக்கிறார், பாஜவை நம்பியதால் நட்டாற்றில் நிற்கிறார் என அதிமுகவில் இருக்கும் செங்கோட்டையன் நலன் விரும்பிகள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்குமாறு செங்கோட்டையன் கெடு விதித்த போது அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி சேர்த்து பறித்தார். ஆனால் கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கவில்லை. அப்போது டில்லி சென்ற செங்கோட்டையன், அங்கு பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதனால் அவருக்கு பாஜ மேலிட ஆதரவு இருக்கலாம் என பழனிசாமியும் நம்பினார். அதற்கேற்பவே அரசியல் சூழல்களும் அப்போது இருந்தன. செங்கோட்டையன் விஷயத்தில் பழனிசாமி பொறுமையாக நடந்து கொண்டார். கட்சியில் இருந்து அவரை நீக்குவதில் அவசரம் காட்டவில்லை. இந்த சூழலில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச்செயலர் தினகரனை செங்கோட்டையன் சந்தித்தார். தனக்கு எதிராக செயல்படும் அவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்ததை பழனிசாமி ரசிக்கவில்லை; கடும் ஆத்திரம் அடைந்தார்.

நவ 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை