/ தினமலர் டிவி
/ பொது
/ ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் ; பழனிசாமி கண்டனம் | EPS | AIADMK | Chain Snatching
ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் ; பழனிசாமி கண்டனம் | EPS | AIADMK | Chain Snatching
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் அறிக்கை; விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தாண்டி, இப்போது பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் தாம்பரத்தில், சென்னை கமிஷனர் ஆபிசில் பணிபுரியும் பெண் எஸ்ஐ உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு பெண் எஸ்ஐ, 2 மளிகை கடை மற்றும் ஓட்டலில் இருந்த பெண்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், பைக்கில் சென்றவர் என அனைவரும் நகைகளை பறிகொடுத்திருப்பது இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது.
ஜன 19, 2025