உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக போலீசை கண்காணிக்க அமித்ஷா உத்தரவு? EPS | Amit shah | BJP | ADMK | Delhi

தமிழக போலீசை கண்காணிக்க அமித்ஷா உத்தரவு? EPS | Amit shah | BJP | ADMK | Delhi

சமீபத்தில் டில்லி சென்ற அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டில் சந்தித்தார். பிறகு தன் காரில் வெளியே சென்ற போது, கர்சீப்பால் தன் முகத்தை மூடிக்கொண்டதாக ஒரு வீடியோ தமிழக மீடியாவில் வெளியானது. இதுகுறித்து அமித் ஷாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் டில்லி போலீஸ், இந்த வீடியோவை எடுத்தவர்கள் யார் என விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தமிழக போலீசின் உளவுத் துறையினர்தான் வீடியோ எடுத்து மீடியாக்களுக்கு கொடுத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. உடனே டில்லி போலீஸ் கமிஷனருக்கு விஷயம் சொல்லப்பட்டது. கமிஷனர் உடனே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் வீட்டு வாசலுக்கு ஏன் தமிழக போலீசார் வந்தனர் என கேட்கப்பட்ட போது, பழனிசாமியின் பாதுகாப்பு தொடர்பாகத்தான் வந்தோம் என பதில் கிடைத்துள்ளது. பாதுகாப்புக்கு வந்தவர்கள் எதற்கு வீடியோ எடுத்தார்கள் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. இந்த விவகாரம் உள்துறை அமைச்சருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் டில்லியில் தமிழக போலீசார் மத்திய அமைச்சர்கள் வீடுகளை கண்காணித்தால், அவர்களை டில்லி போலீசார் கண்காணிக்க வேண்டும் என அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த, 1991ல் சந்திரசேகர் பிரதமராக இருந்த போது ராஜீவ் வீட்டு வாசலில் இரண்டு ஹரியானா போலீசார் உளவு பார்த்தனர். இதனால் கோபமடைந்த ராஜீவ், அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற, சந்திரசேகர் பதவி விலகினார். அதேபோல தமிழக போலீசார் அமித் ஷா வீட்டு வாசலில் உளவு பார்க்கின்றனர் என்கின்றனர் பா.ஜ.வினர். #EPS #AmitShah #BJP #ADMK #Delhi #IndianPolitics #PoliticalLeadership #TamilNadu #BJPIndia #PoliticalStrategy #Governance #Elections #PoliticalParty #NationalPolitics #Leadership #IndiaNews #PoliticalDebate #SouthIndiaPolitics #BJPUpdates

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !