உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் எங்களின் இலக்கு அமித்ஷா கூறியது என்ன? | EPS |ADMK |Palanisami | EPS Amit Shah Meeting

தமிழகத்தில் எங்களின் இலக்கு அமித்ஷா கூறியது என்ன? | EPS |ADMK |Palanisami | EPS Amit Shah Meeting

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பேசியது குறித்து பாஜ வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட பாஜ விரும்புகிறது. இந்த சூழலில் டில்லியில் அமித் ஷாவை, சில தினங்களுக்கு முன் பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக பலம் பெற வேண்டும் என்ற கருத்தை அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அமித் ஷா தரப்பில் தேர்தல் பணிகளில் 1 சதவீதம் கூட தொய்வு ஏற்படாமல் இருக்க கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும். தேர்தல் பிரசார பணிகளில் வேட்பாளர்களையே களமிறக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு பழனிசாமி தரப்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 200 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திமுகவை வீழ்த்த அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும். 175 முதல் 200 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டியுள்ளது. பாஜவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படும்; அந்த தொகுதிகளின் செலவை அதிமுக பார்த்துக் கொள்ளும். உறுதியாக 10 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற அதிமுக பாடுபடும் என கூறப்பட்டுள்ளது.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ