/ தினமலர் டிவி
/ பொது
/ இபிஎஸ் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களுடன் குவிந்த போலீசார் | Bomb threat | Edappadi palanisamy home
இபிஎஸ் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களுடன் குவிந்த போலீசார் | Bomb threat | Edappadi palanisamy home
சேலம் சூரமங்கலத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. தகவலறிந்த போலீசார், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பழனிசாமி வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். கடந்த மாதம் இதேபோன்று சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டது. கடந்த மாதம் மிரட்டியதை போல இந்த மாதமும் சரியாக 25ம் தேதி மிரட்டல் வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
மே 25, 2025