உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இபிஎஸ் சந்தேகம் eps| palanisamy| dmk govt| mkstalin

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இபிஎஸ் சந்தேகம் eps| palanisamy| dmk govt| mkstalin

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது தந்தை அசோக்குமார், மது போதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார். இந்த தொடர் மரணங்கள் சந்தேகப்படும்படி இருக்கின்றன. பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் சிவராமன் கொல்லப்பட்டு இருக்கலாமோ? என்று மக்கள் கேட்கிறார்கள்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ