உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடமாநிலத்தவர் அட்ராசிட்டி வெளுத்து வாங்கிய கேர்ள்ஸ் | viral video | Train passenger problem

வடமாநிலத்தவர் அட்ராசிட்டி வெளுத்து வாங்கிய கேர்ள்ஸ் | viral video | Train passenger problem

கால்ல வந்து உக்கார்றாங்க..! விளாசி தள்ளிய இளம்பெண்கள் ஓடும் ரயிலில் அதிர்ச்சி கையை விரித்த டிடிஆர் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்த பலஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் செல்ல தொடங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா புறப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலையத்தில் காலை 7 மணியளவில் நுழைந்ததும் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் முண்டியடித்து ஏறினர். பெரும்பாலானவர்கள் ஓபன் டிக்கெட் எடுத்து விட்டு, முன்பதிவு பெட்டியில் ஏறினர். முன்பதிவு செய்து பயணித்தவர்களை நெருக்கிக்கொண்டு உட்கார்ந்தனர். வடமாநிலத்தவர் செய்த அட்ராசிட்டியால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்து விட்டனர். எர்ணாகுளம் டு காட்பாடிக்கு டிக்கெட் புக் செய்திருந்த இளம்பெண்களும் அடக்கம். திடீரென திபுதிபுனெ கூட்டம் பெட்டியில் ஏறியதும் இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இது எங்கள் சீட் எழுந்திருங்கள் என இளம்பெண்கள் சொல்லியும் வடமாநிலத்தவர் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. டிடிஆர்களிடம் சொன்னபோது, அவர்களும் கண்டுகொள்ளவில்லை. நாங்க சொல்லதான் முடியும்; நீங்க 139க்குபோன் பண்ணுங்க என கூறிவிட்டு நழுவினர். 139க்கு போன் செய்தால் நோ ரெஸ்பான்ஸ்; பாத்ரூம் போக முடியாமலும், தொடர்ந்து தூங்க முடியாமலும் இளம்பெண்கள் கடும் அவதிப்பட்டனர். இளம்பெண்கள் பயணித்த எஸ் 5 பெட்டியில் இருந்த மொத்த பயணிகளும் தூக்கத்தை தொலைத்தனர். அந்த பெட்டி மட்டுமல்ல எல்லா ரிசர்வ் பெட்டியில் இருந்தவர்களும் வடமாநிலத்தவர்களால் கடும் அவதிப்பட்டனர். இளம்பெண்களின் வீடியோ வைரலான பிறகு, ஓபன் டிக்கெட் எடுத்து விட்டு முன்பதிவு பெட்டியில் ஏறுபவர்களை இறக்கி விடும்படி ரயில்வே போலீசாருக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியது.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை