அப்பளமான கார்: ஈரோட்டில் நடந்த கோர விபத்து | Erode Accident | CCTV
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் மூர்த்தி. தனியார் பள்ளியில் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். பயன்படுத்திய கார் ஒன்றை சமீபத்தில் வாங்கி உள்ளார். இதனை கொண்டாடும் விதமாக ஈரோடு சோலார் பகுதியில் வெள்ளியன்று இரவு நண்பர்களுக்கு டிரீட் கொடுத்துள்ளார். விருந்து முடிந்து காரில் ஈரோட்டில் இருந்து மொடக்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். சின்னியம்பாளையம் அருகே எதிரே வந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் கார் மொத்தமாக உருக்குலைந்து அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூர்த்தி ஸ்பாட்டிலேயே துடி துடித்து இறந்தார். கார் மோதிய வேகத்தில் லாரியின் ஒரு பகுதியே சிதைந்து போனது.
மார் 29, 2025