கொசுவலை கிழித்து திருடப்பட்ட குழந்தை பக்கத்து மாவட்டத்தில் மீட்பு baby abduct| Erode child missing
ஈரோடு, சித்தோடு அருகே, கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில், ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதி துடைப்பம் தயாரித்து விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் மகனும் 2 வயது மகளும் உள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி இரு குழந்தைகளையும் கொசு வலைக்கு உள்ளே தூங்க வைத்துவிட்டு, பெற்றோர் கொசுவலைக்கு வெளியே தூங்கினர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, கொசுவலை கிழிக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 2 வயது மகள் காணாமல் போயிருந்தாள். பதறிபோன பெற்றோர், அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. சித்தோடு போலீசார் 6 தனிப்படை அமைத்து தேடத்தொடங்கினர். அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவிக்களையும் ஆராய்ந்தனர். அங்கு பதிவான செல்போன் சிக்னல்களை ஆராய்ந்து டிராக் செய்தனர். வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணை நாமக்கல் வரை சென்றது. கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தையை 25 நாட்களுக்கு பிறகு நாமக்கல்லில் மீட்டனர். குழந்தை மீண்டும் கிடைத்ததால் பெற்றோருக்கு வார்த்தை வரவில்லை; அழுதபடி அள்ளி அணைத்துக் கொண்டனர். கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர் பெண் குழந்தை திருடப்பட்டது தொடர்பாக 2 பேரை சித்தோடு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். #BabyAbduct #ErodeChildMissing #StolenChildRescued #FemaleBabyStolen