எவ வேலு ரெய்டில் பெட்டி பெட்டியாக பணம், ஆதாரம்-ஷாக் ரிப்போர்ட் EV Velu Raid | DMK vs TVK | CM Vijay
கடந்த திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எவ வேலு.
2022ம் ஆண்டில் கரூரில் ரோடு போடுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கரூரில் 7 கோடி ரூபாய் சாலை திட்டத்தில் எந்த பணியும் செய்யாமலேயே, செய்ததாக கணக்கு காட்டி ஒப்பந்ததாரருக்கு 3.2 கோடி ரூபாய் பணத்தை அரசு வழங்கியது. இதே போல் ஈரோடு, காஞ்சிபுரத்திலும் நடந்தது.
இந்த ஊழல் பணத்தில் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் பங்கு போனதாக அதிர்ச்சி கிளப்பி இருந்தார். திமுக ஆட்சியில் இருந்தவரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையே தவெக ஆட்சிக்கு வந்ததும் ஊழலுக்கு எதிராக முதல்வர் விஜய் பல அதிரடிகளை காட்டி உள்ளார். திமுக அரசில் இருந்த ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
முதல் ஆளாக எவ வேலு மீது நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அறப்போர் இயக்கம் புகாரை ஏற்று வழக்கு பதியப்பட்டது.
அதோடு, நேற்று எவ வேலு, ஒப்பந்ததாரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலுவின் சென்னை வீடு, திருவண்ணாமலை வீடு, கல்வி நிலையங்கள் என மொத்தம் 20 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது.
அதிகாலை முதல் நேற்று இரவு வரை சோதனை நீடித்தது. முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கியது. அவற்றை பெட்டி பெட்டியாக போலீசார் அள்ளி சென்றனர்.
இதற்கிடையே ரெய்டு தொடர்பாக முக்கிய அறிக்கையை வெளியிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ‛சோதனையில் பல முக்கியமான ஆவணங்களையும் டிஜிட்டல் டிவைஸ்களையும் கைப்பற்றி உள்ளோம். வழக்கு தொடர்பான ஆவணங்களும் சிக்கி இருக்கின்றன. இவை இல்லாமல் 40 லட்சம் ரூபாய் கணக்கில் காட்டாத பணத்தையும் கைப்பற்றி உள்ளோம் என்று கூறி உள்ளனர்.
#EVVeluRaid #DMKvsTVK #CMVijay #TamilNaduPolitics #PoliticalDebate #Election2023 #VijaySpeech #PoliticalRally #TamilNaduElections #DMK #TVK #PoliticalCampaign #VijayInAction #StatePolitics #TamilNaduNews #ElectionDebates #PoliticalCondensed #ElectoralBattles #LeadershipMatters