உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பூட்டிய வீட்டில் கொடுமை அனுபவித்த முன்னாள் தாசில்தார் மனைவி | Ex Tahsildar wife | Rescue from locked

பூட்டிய வீட்டில் கொடுமை அனுபவித்த முன்னாள் தாசில்தார் மனைவி | Ex Tahsildar wife | Rescue from locked

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூங்கிள் மண்டபம் அடுத்த மடம் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. வயது 80. மறைந்த தாசில்தார் ராமமூர்த்தியின் மனைவி. இவர்களின் ஒரே மகன் பாஸ்கர் என்கிற மோகன்தாஸ் ஐடிஐ தொழிற்கல்வி கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். கணவன் இறந்த பிறகு லட்சுமி படுத்த படுக்கையானார். தாயை உடன் இருந்து கவனிக்காமல் அஞ்சல் துறையில் பணியாற்றும் மனைவி, பிள்ளைகளுடன் மோகன்தாஸ் வேறொரு வீட்டில் குடியேறினார். பூட்டிய வீட்டில் தனியாக விடப்பட்ட மூதாட்டி லட்சுமிக்கு, தினமும் மோகன்தாஸ் சாப்பாடு மட்டும் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்று விடுவாராம். ஒருமுறை கூட தாய் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை பார்க்காமல் சென்று விடுவார் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாசலில் வைக்கப்படும் உணவை மூதாட்டி லட்சுமி உருண்டபடியே நகர்ந்து சென்று உணவை சாப்பிட்டு வந்துள்ளார். இரவு நேரத்தில் மூதாட்டியை எலிகள் கடிப்பதால் அலறல் சத்தம் கேட்டு வந்துள்ளது. வீடும் பராமரிப்பின்றி பாழடைந்ததால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்ததால் அருகில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி மூதாட்டியின் மகன் மோகன்தாஸ், போலீஸ், சுகாதார துறை என பல இடங்களில் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள லட்சுமியின் உறவினர் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு மூதாட்டியின் நிலை குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த திலீப்குமார், போலீஸ், மருத்துவ குழு உதவியுடன் லட்சுமி வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டனர். (பிரத்) மீட்கப்பட்ட மூதாட்டியை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மூதாட்டி லட்சுமிக்கு மடம் தெருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொந்த வீடு இருக்கிறது. கணவரின் பென்ஷன் பணம் 40 ஆயிரம் மாதா மாதம் வங்கி கணக்கில் வருகிறது. அப்படி இருந்தும் கடைசி காலத்தில் ஆதரவின்றி நரக வேதனையை அனுபவித்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை