உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளைச்சலில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் நேரம் | Exclusive Geethalakshmi

விளைச்சலில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் நேரம் | Exclusive Geethalakshmi

அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ரைஸோட்ரான் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயிர்களில் வேரின் செயல்பாடுகளை கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆசியாவில் முதல் முறையாக இந்த ஆய்வுக் கூடம் கோவை வேளாண் பல்கலையில் நிறுவப்பட்டுள்ளது. ரைஸோட்ரான் ஆய்வுக்கூடத்தை, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி சமீபத்தில் துவக்கி வைத்தார். இது பயிர்களின் வேர் சூழ் மண்டல உயிரிய ஆய்வகம். ஆய்வு கூடத்துக்குள் ஒரு விதை நடப்பட்டு, அது முளைவிட்டு, வளர்ந்து, கிளைபரப்பி, பூ, காய், கனி என முழுமையடையும் வரை, ஒவ்வொரு சூழலுக்கு ஏற்பவும் பயிரின் அனைத்து நடத்தைகளையும் மண்ணுக்குள் கேமரா பொருத்திக் கண்காணிப்பதே இந்த தொழில்நுட்பம். இங்கு வளர்க்கப்படும் பயிர்களின் வேரை, மண்ணுக்குள் சொருகப்படும் கேமரா தொடர்ந்து கண்காணித்து, நொடிக்கு நொடி புகைப்படங்களாக அளிக்கும். இதன் ஆய்வு முடிவுகள் வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார் கோவை வேளாண் பல்கலை துணைவேந்த கீதாலட்சுமி..

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !