சீனாவை அலற விட மோடி எடுத்த மிகப்பெரிய அஸ்திரம் | F-35 Stealth Fighter Jet | Modi Trump meets | US
அமெரிக்க அதிபர் டிரம்பும், மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். உலகமே உற்று நோக்கிய இந்த சந்திப்பு மூலம் அமெரிக்காவும், இந்தியாவும் நிறைய டீல் பேசி இருக்கின்றன. அவற்றில் ஆயுத சப்ளையும் முக்கியமான ஒரு டீல். ‛இப்போதைய நிலைமையில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன் ஆயுதங்கள் தேவை. எங்களிடம் நிறைய ஆயுதங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மோடியிடம் போனில் டிரம்ப் பேசி இருந்தார். சீனா 4, 5, 6 என்று அடுத்தடுத்த தலைமுறை போர் விமானங்களை அறிமுகம் செய்து வருகிறது. வினோதமான ஆயுதங்களையும் தயாரித்து குவிக்கிறது. சீனா மூலம் வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியாவிடம் அதிநவீன ஆயுதங்கள் இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக டிரம்ப் சொல்லி இருந்தார். இப்போது வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிலும் இது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.