போலி ₹2000 நோட்டுகள் பதுக்கியவரை கைது செய்து விசாரணை! Fake ₹2000 Currency | IT | Chennai
கட்டுகட்டாக ₹9.48 கோடி போலி ₹2000 நோட்டு பதுக்கல்! கேரள நபர் சிக்கினார்! சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஷ்ரவன் குமார் ரெட்டி என்பவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் ராயப்பேட்டை பூரம் பிரகாசம் ராவ் சாலையில் உள்ள வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி இருந்தார். போலீசார் அங்கு சோதனை செய்தனர். ஒரு வீட்டில் கட்டுகட்டாக போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 9.48 கோடி ரூபாய்க்கு போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி நோட்டுகளை பதுக்கி வைத்திருந்த கேரளாவை சேர்ந்த ரஷீத் அலிக்கோடன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஒருவரை ஏமாற்றும் நோக்கில் போலி நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.