திமுக மனுவில் கூறியிருப்பது என்ன? | Fake books | Library Scam | DVAC | DMK
கோவை ஈவெரா நூலகத்தில் போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பூதகரமாகி உள்ளது. கன்னிமரா நூலகத்திலும் போலி நூல்கள் கண்டறியப்பட்டன. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். திமுகவும், ஆட்சியில் இருக்கும் தவெகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறுகின்றன. இந்த சூழலில் திமுக தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது; புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக அரசு நியமித்துள்ள விசாரணை குழு போதுமானது அல்ல. கொள்முதல் தொடர்பான கோப்புகளை பறிமுதல் செய்து பத்திரப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை நடத்தாமல் முந்தைய அரசை குற்றம் சாட்டுகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிடுமாறும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #Fakebooks | #LibraryScam | #DVAC | #DMK | #TVK | #TNGovt | #HighCourt