உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டராக குறுக்கு வழி: திண்டுக்கல் மாணவி பெற்றோருடன் கைது Fake NEET certificate | Student arreste

டாக்டராக குறுக்கு வழி: திண்டுக்கல் மாணவி பெற்றோருடன் கைது Fake NEET certificate | Student arreste

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதன், வயது 55. அரசு சர்வேயர். மனைவி விஜய முருகேஸ்வரி வயது 47. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி, வயது 19. 2025ல் நடந்த நீட் தேர்வில் 228 மதிப்பெண் பெற்றார். முதல்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. மகளை எப்படியாவது டாக்டராக்க வேண்டும் என சொக்கநாதன் நினைத்தார். தடம் மாறி குறுக்கு வழியில் யோசித்தார். அவரது மகள் நீட் தேர்வில் 456 மதிப்பெண் பெற்றது போல போலி மார்க்-ஷீட் தயாரித்தார். அதனை கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் பெற்றனர். தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீவர்ஷினியின் நீட் தேர்ச்சி மற்றும் கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டு சான்றிதழ் போலி என தெரிந்தது. இந்த தகவல் திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி பொறுப்பு முதல்வர் வீரமணிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரில், மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி, பெற்றோர் சொக்கநாதர், விஜயமுருகேஸ்வரி மூவரையும் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஆன்-லைன் மூலம் போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை சொக்கநாதர் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களுக்கு மனைவியின் ஜிபே மூலம் 25 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய் என 2 முறை பணம் செலுத்தியுள்ளார். அவர்கள் உடனடியாக போலியாக அரசு இ-மெயில் ஐடியை உருவாக்கி, அதிலிருந்து நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழை அனுப்பியுள்ளனர். #FakeNEETcertificate #Studentarrestedwithparents #WestBengalgang #governmentmedicalcollege #NEETExam #Dindigul

நவ 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை