உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு வீடாக பணம் வசூலித்த பெண்களிடம் போலீஸ் தீவிர விசாரணை! Fake NGO | Money Collection | Villupuram

வீடு வீடாக பணம் வசூலித்த பெண்களிடம் போலீஸ் தீவிர விசாரணை! Fake NGO | Money Collection | Villupuram

விழுப்புரம் என்ஜிஓ காலனிக்கு இன்று காலை, வெள்ளை நிற கோட் அணிந்த 3 பெண்கள் வந்தனர். தாங்கள் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அங்கு ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் அப்பகுதி மக்களிடம் கூறினர். ஆதரவற்றவர்களுக்காக பழைய துணிகள் மற்றும் பணம் கேட்டு வீடு வீடாக சென்றனர். அங்கு இருந்தவர்களிடம் துணி, பணம் கேட்டு விடாமல் தொல்லை கொடுத்தனர். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவர்கள் வைத்திருந்த தொண்டு நிறுவன நோட்டீஸில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து விசாரித்தனர். அப்படி ஒரு தொண்டு நிறுவனமே செயல்படவில்லை, பெண்கள் அளித்தது போலி தகவல் என அப்போது தான் தெரிய வந்தது. விழுப்புரம் பகுதியில் சமீப காலமாக கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். மேலும் துணி, பணம் வசூலித்து என்ன செய்கின்றனர். இதன் பின்னணியில் உள்ள நெட்வொர்க் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொண்டு நிறுவனத்தின் பெயரை கூறி பணம் மற்றும் நிவாரண பொருட்கள் வசூல் நடந்து வருகிறது. தற்போது விழுப்புரத்தில் போலியான மூவர் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை