உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டசபைகளில் குறைவு; பார்லியில் அதிகம் | family politics | MLA | MP | MLC | Congress | BJP | ADR |

சட்டசபைகளில் குறைவு; பார்லியில் அதிகம் | family politics | MLA | MP | MLC | Congress | BJP | ADR |

நாட்டின் எம்எல்ஏ - எம்பி, - எம்எல்சிக்களில் 21 சதவீதம் பேர் குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள். மொத்தமுள்ள 5,204 மக்கள் பிரதிநிதிகளில் ஐந்தில் ஒருவர் குடும்ப அரசியல் பின்னணியை கொண்டுள்ளனர். இது லோக்சபாவில் அதிகமாக உள்ளது என ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு வெளியிட்ட அறிக்கை: தேசிய கட்சிகளில் 21 சதவீதத்தினர் குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள். இதில் 32 சதவீதத்துடன் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. 18 சதவீதத்துடன் பாஜ அடுத்த இடத்தில் உள்ளது. நாட்டின் தற்போதைய 1,107 எம்.எல்.ஏ., - எம்.பி., - எம்.எல்.சி.,க்கள் குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்கள். மாநில சட்டசபைகளில் குடும்ப அரசியல் பின்னணி உடைய எம்எல்ஏக்கள் பங்கு 20 சதவீதமாக உள்ளது. லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்ட மேல்சபைகளில் இது முறையே, 31, 21 மற்றும் 22 சதவீதமாக உள்ளது. மாநிலங்கள் அளவில், குடும்ப அரசியல் பின்னணி உடைய மக்கள் பிரதிநிதிகள் பட்டியலில் முதலிடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது. இங்குள்ள 604 மக்கள் பிரதிநிதிகளில் 141 பேர் குடும்ப அரசியல் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் 129; பீஹாரில் 96; கர்நாடகாவில் 94 மக்கள் பிரதிநிதிகள் குடும்ப அரசியல் பின்னணி உடையவர்கள். ஆண்களை விட பெண்களிடையே குடும்ப அரசியல் பின்னணி இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. வலுவான கட்சி அமைப்புகளை கொண்ட பெரிய மாநிலங்களான தமிழகம், மேற்கு வங்கத்தில் குடும்ப அரசியல் குறைவாகவே உள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #familypolitics | #MLA | #MP | #MLC | #Congress | #BJP | #ADR | #ADR Reports

செப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை