உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேவையில்லாமல் பேச கங்கனாவுக்கு நட்டா தடை Farmer remark J.P.Nadda Kangana Ranaut mp bjp

தேவையில்லாமல் பேச கங்கனாவுக்கு நட்டா தடை Farmer remark J.P.Nadda Kangana Ranaut mp bjp

நடிகையும், ஹிமாச்சலின் மண்டி தொகுதியின் பா.ஜ எம்.பியுமான கங்கனா ரணாவத் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசியது சர்ச்சையானது. விவசாயிகள் போராட்டத்தின் போது, மோடி அரசு வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வங்கதேசத்தில் நடந்தது நம் நாட்டிலும் நடந்திருக்கும். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதும், போராட்டம் தொடர்ந்ததற்கு, சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சக்திகள் காரணமாக இருந்திருக்கலாம் என்றார். கங்கனாவின் இந்த பேச்சுக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. கங்கனாவின் கருத்தில் உடன்படவில்லை. எதிர் காலத்தில் கட்சியின் கொள்கை விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு அதிகாரம் இல்லை என பாஜ விளக்கமும் அளித்திருந்தது.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ