உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆய்வு செய்து ஆலையை தற்காலிகமாக மூடிய தாசில்தார்! Farmers demand to close coconut mill | Palladam

ஆய்வு செய்து ஆலையை தற்காலிகமாக மூடிய தாசில்தார்! Farmers demand to close coconut mill | Palladam

பல்லடம் அருகே வாவிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குள்ளம்பாளையத்தில் தேங்காய் சிரட்டை ஆலை உள்ளது. இங்கு தேங்காய் சிரட்டைகளை சுட வைத்து கார்பன் தயாரித்து வெளிநாடுகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் மண் வளம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயம் குற்றம் சாட்டுகின்றனர். ஆலையை மூட வலியுறுத்தி வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாடு அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இதைக் கண்டித்து, ஆலையை உடனே மூட வலியுறுத்தி பல்லடம் - உடுமலை ரோட்டில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை