உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவை வீழ்த்தும் சக்தியாக பாஜ மாறியதால் ஸ்டாலின் அச்சம் Fear due to Amit Shah's strategy

திமுகவை வீழ்த்தும் சக்தியாக பாஜ மாறியதால் ஸ்டாலின் அச்சம் Fear due to Amit Shah's strategy

பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிலேயே பாஜவுக்கு எதிராக போராடும் ஒரே கட்சி திமுக தான். பாஜவால் வெற்றி கொள்ள முடியாத மாநிலம் தமிழகம் மட்டும் தான். பீகாரில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த இலக்கு தமிழகம் தான் என்று கூறுகிறார் அமித்ஷா. அவரது படையையே கூட்டி வந்தாலும் தமிழகத்தில் எதுவும் நடக்காது என வாய் சவடால் விட்டிருக்கிறார். தமிழகத்தில் பாஜ வெற்றிபெற முடியாது என்றால் பாஜவை பற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும். திமுகவை வீழ்த்தும் சக்தியாக பாஜ மாறிவிட்டதால் தான் எந்த கூட்டமாக இருந்தாலும் பாஜவை பற்றியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றியும் மட்டுமே ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். வரும் சட்டசபை தேர்தலுக்கு பாஜ கூட்டணிக்கான, அமித்ஷாவின் வியூகம் ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த அச்சம்தான் திருவண்ணாமலையில் வெளிப்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை தரவில்லை என்றால் தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என காங்கிரஸ் திமுகவை மிரட்டி வருகிறது. அந்த பதற்றத்தில் தான் பாஜவை பற்றி ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுக என்பது வலுவான கட்சி அல்ல. சிறுபான்மை மதத்தினரின் வாக்கு வங்கி இல்லாவிட்டால் திமுகவுக்கு எந்த தேர்தலிலும் வெற்றியே கிடைக்காது. 2014 லோக்சபா தேர்தலில் திமுக சில சிறு கட்சிகள் துணையுடன் தனித்துப் போட்டியிட்டபோது படுதோல்வி அடைந்தது. ஆனால், அந்த தேர்தலில் பாஜ கூட்டணி 18 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளை வென்றது. தனித்து போட்டியிட்டால் ஒருநாளும் திமுகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது மட்டுமல்ல, ஒரு சில தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்பதை 2014 லோக்சபா தேர்தல் நிரூபித்தது. ஆறு முறை அரசியல் விபத்துகளால் வென்ற திமுக, ஏழாவது முறையாக அதுபோன்ற அரசியல் விபத்து நடக்குமா என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாத திமுக இந்த முறையும் வெல்லப் போவதில்லை. திமுகவின் சிறுபான்மையினரை தாஜா செய்யும் இந்து விரோத அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை கூட்டத்தில் 40, 50 ஆண்டுகள் திமுகவுக்காக உழைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களை தனது மகன் உதயநிதியின் புகழ் பாட வைத்ததுதான் ஸ்டாலினின் சாதனை. அண்ணாதுரை காலத்திலிருந்து அரசியல் செய்யும் மூத்த தலைவர் துரைமுருகனை துணை முதல்வர் ஆக்காமல், மகனை துணை முதல்வராக்கி குடும்ப ஊழலாட்சி நடத்தி வரும் ஸ்டாலின் பாஜவுக்கு பாடம் எடுக்க வேண்டாம். #FearduetoAmitShahsstrategy #BJP #VanathiSrinivasan #MKStalin #DMK #Thiruvannamalaimeeting

டிச 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை